செய்திகள்
துப்பாக்கியால் 15பேரை சுட்டுக்கொன்ற படையினர் !
துப்பாக்கியால் 15பேரை சூடான் இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.
சூடானில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் சாவடைந்துள்ளனர் .
இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், ஒரே நாளில் இத்தனை அதிகம் போ் சாவடைந்தது இதுவே முதல்முறையாகும்.
சூடானில் இராணுவ ஆட்சியை எதிா்த்து தலைநகா் காா்ட்டூம், சூடான் துறைமுகம், கஸாலா, டோங்கோலா, வாட் மடானி, ஜெனினா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் 15 போ் சாவடைந்ததாக மருத்துவா்கள் சங்கம் தெரிவித்தது.
சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்.
அதன்பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.
அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், அந்த அரசை இராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது சூடானில் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
You must be logged in to post a comment Login