தொடரும் கனமழை – மேட்டூர் அணையின் நீர்வரத்து பல மடங்கு உயர்வு

meddur anai

meddur anai

மேட்டூர் அணையின் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு

இந்தியா தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்ததாக தமிழ்நாட்டின் நீர்வாரியம் அறிவித்துள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக நேற்று காலை வினாடிக்கு 15,740 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 29,380 கன அடியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#indiya

Exit mobile version