கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஏ–9 வீதியிலுள்ள தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த (வயது–75 ) முதியவர் ஒருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
இதில் முதியவரின் கால் துண்டாடப்பட்டதுடன் தலைப் பகுதியிலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment