நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழை தொடர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் பருவ மழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு சாவடைந்தோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 41 பேரை காணவில்லை.
அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் 49 வீடுகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
#world
Leave a comment