இன்று நல்லூரான் தீர்த்தம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.
அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இம்முறை நல்லூரான் மகோற்சவம் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகையின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் நடைபெற்று வருகின்றது.
தேர்த்திருவிழாவான நேற்றையதினம் தேர் இழுக்காது முருகப்பெருமான் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் வந்து அருள்காட்சி தந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment