விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொவிட் தொற்று!!
தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வயோதிபப் பெண் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 பிள்ளைகளின் தாயான 65 வயதுடைய பூபாலசிங்கம் தனலட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
Leave a comment