நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!
அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
அவருக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்தபோதும் தமிழ் அரசுக் கட்சியால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment