பால்மா மீதான அனைத்து வரிகளும் நீக்கம்!
இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியது.
இதனடிப்படையில், உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
Leave a comment