வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சாதாரண விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு நிலையில், பரிசோதனை முடிவுகளில் அவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.