திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன சாரதி குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து ஹபரண மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமன் வெரணியகொட இரண்டு லட்ச ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ரசிக கிம்ஹான் தனஞ்சய ரூபசிங்க என்ற நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை ஹபரண வீதியில் 2021 டிசம்பர் 25ஆம் திகதி சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த நபருக்கு எதிராக கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
#SriLankaNews