அவசர சிகிச்சை பிரிவில் 186 கொரோனா நோயாளர்கள்!!

a7ac62f3 1bb3351c oxygen

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (27) வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4 ஆயிரத்து 347 பேர் கொரோனாத் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Exit mobile version