யாழில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களில் உள்ள 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார் .
நேற்றைய தினம் (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு 11 ஆயிரத்து 877 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் , அவ் வகையில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகளும் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றனெ.
ஒன்றுகூடல்கள், தேவையற்ற பயணங்கள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளும்படி பொதுமக்களை மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம் – என்றார்.