இலங்கை பிரஜைகள் 15 பேரை கைது செய்து இந்திய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
குறித்த 15 பேரும் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தமிழ் நாட்டில் நடைபெற்ற பல கூட்டங்களில் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்தோடு இவர்களில் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக போரில் ஈடுபடவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
IndiaNews
Leave a comment