கோஷ்டி மோதல் – நெல்லியடியில் 15 பேர் கைது!

1629371978 1618491646 court 2

இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள இராஜ கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு இரண்டு குழுக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளன.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகவே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version