மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவீட்டு வீடு திரும்பிய நிலையிலையே நகைகள் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதன்போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளது .
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews