தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு இந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (டிசம்பர் 9) வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு, இந்திய மதிப்பில் ரூபாய் 2,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.