கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடு செல்லும் நிமித்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள நிலையில், வெளிநாடு சென்றுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காணப்பட்டாலும் வேலைவாய்ப்பு நிமித்தம் பெருமளவு இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதன்படி, கட்டாருக்கு 30 ஆயிரம் பேரும், சவூதி அரேபியாவுக்கு 27 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20 ஆயிரம் பேரும், தென் கொரியாவுக்கு ஆயிரத்து 400 பேரும், சிங்கப்பூரில் ஆயிரத்து 100 பேரும், சைப்ரஸில் ஆயிரத்து 600 பேரும், ஜப்பானில் 800 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த நாடுகளில் பணியாற்றி வருகின்றன – என்றுள்ளது.
#SrilankaNews