அரசு இதுவரை கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 113 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னணியில் திகழ்வதற்கான காரணம் அவசியமான காலங்களில் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கவில்லையென தெரிவித்தார்.
அத்துடன் சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அந்த துறையை மேலும் முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment