நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் தனியார் பேருந்து சேவையிலிருந்து விலகியுள்ளனர் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,
தற்போது 50 சதவீதமான சேவைகளே இடம்பெறுகின்றன. இதனால் பேரூந்து சேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுமார் 10000 சேவையாளர்கள் விலகி வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக, தனியார் பஸ் தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews