ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில் 400 கோடி ரூபாவையே திணைக்களம் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரயில் கட்டணத்தை அதிகரித்தால் நட்டத்தை ஓரளவு நிவர்த்திசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே திணைக்களமானது இதற்கு முன்னர் வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த வருடத்தில் வருமானம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.
பஸ் கட்டணங்கள் அடிக்கடி அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் இறுதியாக 2018 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இதுவரை ரயில் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை. ரயில் சேவையை மக்கள் சேவையாக முன்னெடுத்துச் செல்வதானால் இலாபம் நட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Srilankanews