தலிபான்களின் 100 நாள் ஆட்சி – சுடுகாடாகும் ஆப்கான்

afganistan

afganistan

தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது.

ஆப்கானை  தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது.

அகஸ்ட் 15ம் திகதி காபூலைக் கைப்பற்றி ஆப்கானை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்களால் நாட்டில் அமைதியை உண்டாக்க முடியவில்லை.

ஆப்கானில் 40 ஆண்டுகள் இடம்பெற்ற போர்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் இல்லாமை , வேலையின்மை என கடும் மனவுளைச்சலுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.

அத்தோடு ஐ.எஸ் அமைப்பினர் தாலிபான்களை குறி வைத்து தாக்குதல்களைத் மேற்கொண்டு வருகிறார்கள் .

அதனால் ஆப்கானில் அமைதியை நிலைநாட்டி பொருளாதாரத்தை மேம்படுத்த தாலிபான்கள் மிகவும் கஸ்ர பட்டு வருகின்றனர்.

தாலிபான்களை ஆட்சியில் ஆரம்பத்தில் பெண்களின் கல்வி தொடர்பாக தம் முன்பிருந்தவாறு கட்டுப்பாடுகளை விதிக்கமட்டோம் என தெரிவித்த தலிபான்கள் பின்பு சிறு பெண் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்க முடியுமென கட்டுப்பட்டை விதித்தனர்.

இதன் காரணகளால் ஆப்கானில் பெண்கள் இப்போது வரை தமது உரிமைக்காக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version