நாள் ஒன்றில் 10 ஆயிரம் தொற்றாளர்கள்!!!

Vasan Ratnasingam

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாதமொன்றுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும்.

பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால் மாத்திரமே கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

நாடு தற்போது எச்சரிக்கை நிலை நான்கில் உள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையையும் சமூக பரவலையும் குறிக்கின்றது. மேலும் தென்னாபிரிக்காவில் பரவும் சி12 எனப்படும் புதிய கொரோனா திரிபும் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version