10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Tamil News large 2934487

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு தயார்நிலையில் இருந்த செம்மரக்கட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த செம்மரக்கட்டைகள் இந்திய ரூபாவில் 10 கோடி மதிப்புடைய 20 டன் நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை அடுத்து புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்தே குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India

Exit mobile version