யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த முக்கியமான பொருட்கள் யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் (அக் 30) குறித்த பகுதியைச் சுத்தம் செய்த வேளையிலேயே இந்தப் பொருட்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கோப்பாய் காவல்துறையினருக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, நேற்று இரவு முதல் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று (நவ 01) காலை, காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்கப்பட்ட இரண்டு மகசின்கள் மற்றும் வயர்களையும் பத்திரமாக மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

