வெளிநாடு செல்லவுள்ளோருக்கு கொவிட் சோதனை!!
வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு எழுமாறாக கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோருக்கு, விமான நிலைய வளாகத்தில் வைத்து அடுத்த வாரம் முதல் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்திசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பணியகம் தெரிவித்துள்ளது.
Leave a comment