விரைவில் மூன்றாவது டோஸ்!!-இராணுவத் தளபதி தெரிவிப்பு
கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல் கட்டமாக சகல சுகாதாரப் பணியாளர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
Leave a comment