விசேட சோதனை நடவடிக்கை வவுனியாவில்!

வவுனியா நகரப்பகுதியில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெற்றது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள வங்கி, மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், உணவகங்களில் சோதனைகள் நடைபெற்றது.

சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கை வைத்தியர் அரங்கன் மற்றும் பிரசன்னா தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

21 619392d2549ed

#SriLankaNews

Exit mobile version