வரலாற்றிலிருந்து காணாமல் போவோம் – வைரலாகும் சிறுமியின் காணொலி
தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து ஆப்கான் நாட்டவர்கள் தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர்.
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். இந்த போராட்டத்தில், பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து சிலரின் மரணம் பற்றிய செய்திகளும், அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்த நிலையில் இதேபோன்று ஆப்கான் மக்களின் வலியை சிறுமி ஒருவர் காணொலி மூலம் பதிவுசெய்துள்ளார்.
அதில் உலகம் ஆப்கானிஸ்தான் மக்களை பற்றி கவலைப்படவில்லை. சில நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இனி நாம் மெல்ல மெல்ல வரலாற்றிலிருந்து காணாமல் போவோம் என மிகவும் வருந்தி அழுது தனது வலியை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a comment