ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி: கிளாஸ்கோவில் ஜனாதிபதியின் காதுகளைக் கிழிக்கும் கோஷங்கள் (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐக்கிய இராஜ்யத்தின் கிளாஸ்கோ நகரில் தங்கியிருந்த விடுதியைச் சூழ்ந்து புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Gotta 02

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலேயே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்ததாக தெரியவந்துள்ளது.

ஹில்டன் ஹோட்டலில் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் தங்கியிருக்கின்ற நிலையில், அங்கு தங்கியிருக்கும் கோட்டாபயவுக்கு எதிராக இன்று அதிகாலை முதல் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்துள்ளனர்.

‘ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி’, ‘மனித உரிமைகளை மீறுபவர்’, ‘கொலையாளி’ என்று பல்வேறு கோஷங்கள் முழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்குகொள்வதற்காக கிளாஸ்கோ சென்ற ஜனாதிபதிக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version