யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்
யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன், இறப்புகளும் அதிகரித்து செல்கின்றன.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும்.
இதேவேளை, மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப் பயிற்சி என்பவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
ஏற்கெனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவசரப்படாது அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்’ – என மாவட்டச் செயலாளர் கூறினார்.
1 Comment