ரீச்மீ (ReachMe) நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான பாரிய கல்விக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி (தை) 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா இது குறித்த விபரங்களை வெளியிட்டார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
சதுரங்கப் போட்டி, நடனப் போட்டி, மற்றும் பாடல் போட்டிகள் என மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திரைப்படத் துறை தொடர்பான பயிற்சிகள் மற்றும் சுவையான உணவுத் திருவிழா (Food Fest) ஆகியவையும் இதில் இடம்பெறும். யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர்செய்து, அதனை மீண்டும் ஒரு கல்வி மையமாகக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். கல்வியைச் சுவாரஸ்யமான முறையில் எப்படிக் கற்கலாம் என்பதை இந்த கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு உணர்த்தவுள்ளோம்,என அஞ்சலிகா தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையவுள்ள இந்தக் கண்காட்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.