image 75e605e1f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் சோகம்: ரயில் மோதி 82 வயது முதியவர் பரிதாப மரணம்!

Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி (82 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘யாழ்ராணி’ ரயிலுடன், உதயநகர் பகுதியிலுள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் போதிய பாதுகாப்பு சமிக்ஞைகள் இருந்ததா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

ரயில் கடவைகளைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...