யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92 வயது) ஆண், உரும்பிராயைச் சேர்ந்த (86 வயது) ஆண், மானிப்பாயைச் சேர்ந்த (85 வயது) ஆண், கைதடியைச் சேர்ந்த (43 வயது) ஆண், அளவெட்டியைச் சேர்ந்த (68 வயது) பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Leave a comment