முன்னாள் காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம்! – போலாந்து மிருகக்காட்சிசாலையின் விசித்திர பழிவாங்கல் திட்டம்.

7l7ab4lg cockroach 625x300 21 October 25

காதலர் தினத்தை முன்னிட்டு முன்னாள் காதலன் அல்லது காதலியின் (Ex) நினைவுகளை வித்தியாசமான முறையில் துடைத்தெறிய விரும்பும் நபர்களுக்காக, போலாந்தின் ஓரியண்டேரியம் மிருகக்காட்சிசாலை (Orientarium Zoo) ஒரு வினோதமான திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் முன்னாள் துணையின் பெயரை ஒரு ‘மடகஸ்கார் சீறும் கரப்பான் பூச்சிக்கு’ (Madagascar Hissing Cockroach) சூட்டலாம். பெயர் சூட்டப்பட்ட அந்தப் பூச்சி, மிருகக்காட்சிசாலையில் உள்ள பாலைவன கீரி (Meerkat) போன்ற விலங்குகளுக்கு உணவாக வழங்கப்படும்.

இந்தத் திட்டம் பெப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வினோதப் பழிவாங்கலுக்குப் பின்னால் ஒரு சமூக அக்கறையும் உள்ளது. இந்தப் பெயரிடல் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியானது, அழியும் நிலையில் உள்ள விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற ஒரு நிதி திரட்டும் முயற்சியை அமெரிக்காவின் புகழ்பெற்ற சான் அன்டோனியோ (San Antonio) மிருகக்காட்சிசாலையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2023-இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது 2026-ஆம் ஆண்டிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Exit mobile version