26 69806d6b7f392
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மயிலிட்டியில் சோகம்: இராணுவ வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

Share

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் இராணுவ வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி வீதியில் முதியவர் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதே திசையில் வந்த இராணுவ வாகனம் அவர் மீது மோதியுள்ளது.

இக்கோர விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இராணுவத் தரப்புடன் இணைந்து இராணுவ பொலிஸாரும் (Military Police) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான இராணுவ வாகனத்தின் சாரதியிடம் மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...