மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

கொவிட் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 – 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி செயன்முறை மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே தொற்றைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுக – என்றுள்ளது.

Exit mobile version