IMG 20210814 WA0019
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!!

Share

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்த முற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

3 கோடி ரூபா பெறுமதியான 2 கிலோ கிராம் 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கோடி 40 லட்சம் பெறுமதியான 120 கிலோ கிராம் கஞ்சா என்பன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் கூறினர்.

கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின்போது, பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்ட குறித்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கடத்த முற்பட்டனர் என்று மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...