போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில் ஈடுபடுமென ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வழமையான பயணிகள் போக்குவரத்துக்கான ரயில் மற்றும் பஸ் சேவைகள் அனைத்தும் இந்தக் காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
எனினும், சுகாதாரத் துறையினருக்காக விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ண ஹங்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் துறைமுகங்கள் மற்றும் சுங்கம் உள்ளிட்டவற்றில் தொழில் புரியும் ஊழியர்களுக்காகவும் சில பஸ் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.