images 2 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: பிராந்திய நிறுவனங்களுடன் நாளை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம்!

Share

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் நாளை (30) கையெழுத்திடப்படவுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

புதிய சம்பள உயர்வின் படி, தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக (200 ரூபாய் அதிகரிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வரவை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் நேரடியாக 200 ரூபாவினை வழங்கவுள்ளது. இதற்கமைய ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 1,750 ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தச் சம்பள அதிகரிப்பைத் தடையின்றி வழங்குவதற்காக, 2026 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 5,000 மில்லியன் (500 கோடி) ரூபாய் நிதியை விசேடமாக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டங்களுக்குப் பலன் கிடைக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...