பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் (Zakir Naik), பங்களாதேஸுக்குள் நுழையத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தற்போது மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 28, 29 ஆகிய திகதிகளில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, ஒரு உள்ளூர் அமைப்பு இவரை அழைத்திருந்தது.
மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், அவர் ஒரு மாதம் பங்களாதேஸில் தங்கவும் ஒப்புதல் அளித்ததாக முன்னர் கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், தற்போது பங்களாதேஸின் உள்துறை அமைச்சு, ஜாகிர் நாயக் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எனினும், அமெரிக்கப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத வரி தொடரும் என்றும் சீனா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.