பதுளையில் இளம் வயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு; வெலிக்கந்தையில் அதிக சிறுவர் குற்றங்கள் – அமைச்சர் எச்சரிக்கை!

8f144b60 f970 11ef 9e61 71ee71f26eb1.jpg

பதுளை மாவட்டத்தில் இளம் வயதுக் கர்ப்பங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள பிரதான பிரச்சினைகள் இளம் வயதுக் கர்ப்பங்கள்: பதுளை மாவட்டத்தில் மிக இளம் வயதிலேயே கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்வடைந்துள்ளது. இவ்வாறான இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு மையங்களோ அல்லது தங்குமிட வசதிகளோ (Safe Houses) அங்கு இல்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் பதுளையில் அதிகரித்துள்ளன.

பெற்றோர்களால் பிள்ளைகள் உடல்ரீதியாகத் தாக்கப்படும் சம்பவங்கள் பதுளை மாவட்டத்தில் அதிகமாகப் பதிவாகி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலேயே சிறுவர்கள் மீதான குற்றங்கள் மற்றும் சிறுவர் தொடர்புடைய வன்முறைகள் மிக அதிகமாக இடம்பெறும் இடமாக பொலன்னறுவையின் வெலிக்கந்தை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமூகச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாவட்ட ரீதியான விசேட செயலணிகளை அமைக்கவும், தற்காலிகப் பாதுகாப்பு இல்லங்களை உருவாக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version