நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!
செய்திகள்இலங்கை

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

Share

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு  ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது.

அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டம் 2 ஆயிரத்து 500 ரூபா என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகின்றன.

எனவே தண்டப்பணத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...