IMG 20210817 WA0013
செய்திகள்உலகம்

நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

Share

நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று  நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி நியூஸிலாந்து முழுவதும் நாளை புதன்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் சென்றுவந்த கடலோர நகரம் ஏழு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

4 ஆம் நிலையில் கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் சுமார் 2,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 4
இலங்கைசெய்திகள்

வடக்கில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய தடை

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வடக்கு மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத்...

15 4
இலங்கைசெய்திகள்

தாஜூதீன் கொலை: வெகுவிரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படவுள்ள விடயம் – பிரதியமைச்சர் தகவல்

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர், அந்த...

13 8
இலங்கைசெய்திகள்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்

கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரை கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்....

12 8
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் நாடாளுமன்றில்...