upul rohana
செய்திகள்இலங்கை

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

Share

நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் தற்போது அதிகரித்துச் செல்கிறது. இதனால் தொற்றாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பியுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனாத் தொற்றால் அதிகமானோர் இறக்கின்றனர். இதற்கு டெல்ரா பரவல் அதிகரித்துள்ளமையே காரணமாகும். தொற்றுக்குள்ளாவோரின் தொகை குறைக்கப்பட வேண்டுமெனில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை 150ஐ தாண்டும். அதேபோல தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு விரைவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களுக்காவது முடக்கினால் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும். தற்போது எம்முன் வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா என்கிற இரு சவால்களே உள்ளன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...