fire 1
செய்திகள்உலகம்

தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!!

Share

தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!!

உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது.

பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமான ரிவியராவை (Riviera) உள்ளடக்கிய தெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும் காட்டுத்தீ பரவி கட்டுக்கடங்காமல் எரிகிறது. அங்கு வார்(var) என்னும் மாவட்டத்தின் கடற்கரை நகரமான Saint-Tropez தீயால் சூழப்பட்டுள்ளது.

திங்களன்று பரவத் தொடங்கிய தீ la plaine des Maures எனப்படுகின்ற இயற்கை வனவளப் பிரதேசத்தின்
அரைவாசிப் பகுதி அடங்கலாக ஆறாயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தாவர இனங்களை அழித்துள்ளது. தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

தங்குமிட விடுதிகளில் கோடை விடுமுறையைக் கழிக்கின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் பொலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிரு நிமிட அவகாசத்தில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு அவசரமாக இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்ததாக உல்லாசப்பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

fire1

சில இடங்களில் இருபது முதல் நாற்பது மீற்றர் உயரத்துக்குத் தீப் பிளம்பு கிளம்புவதைக் காணமுடிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 900 வீரர்கள் 150 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15
விமானங்கள் சகிதம் முழு மூச்சாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகப் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் பொதுவாகக் கடும் கோடையில் ஆங்காங்கே காட்டுத் தீ அனர்த்தங்கள் நேர்வதுண்டு. ஆனால் இந்த முறை நெருப்பின் வீரியம் மனித இருப்பை அச்சுறுத்துகிறது. வளிமண்டலத்தின் கடும் வெப்ப அனலும் அதனைப் பரப்பி வீசுகின்ற காற்றும் தீயணைப்பு முயற்சிகளை சவாலாக்கி உள்ளன.

நெருப்பு அங்கு பரந்த பரப்புக்கு பரவிவிடக் கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் நாட்டின் அதிபர் மக்ரோன்
நேற்று மாலை காட்டுத் தீ பாதித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். உள்துறை அமைச்சரும் அவருடன் அங்கு சென்றார். மக்ரோன் அங்கு தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களோடு உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

fire..

இந்த ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்கள் உலகை உச்ச வெப்பத்தில் வறுத்தெடுத்த மாதங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மத்தியகடல் பிராந்தியத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக கிறீஸ், ஸ்பெயின்
துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளின் பல இடங்களில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...