1770184008 IMG 20260204 WA0015
செய்திகள்அரசியல்இலங்கை

தாயகத்தில் இடைக்கால நிர்வாகம் வேண்டும்! – ஐ.நா-வுக்கு தமிழ் மக்கள் அனுப்பிய வரலாற்று முக்கியத்துவமிக்க மனு.

Share

எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரெழுச்சிப் போராட்டங்களின் போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய விசேட மனு வாசிக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு எட்டப்படும் வரை, வடக்கு – கிழக்கு தாயகப் பகுதிகளில் அன்றாட நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையை (Interim Administrative Mechanism) உருவாக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும், சர்வதேசத்தால் கண்காணிக்கப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு (Referendum) மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுவில் முன்வைக்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகள்:
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

தொல்பொருள், வனவளம் மற்றும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் நிலங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சின்னங்களைப் பலவந்தமாக நிறுவுவதை நிறுத்த வேண்டும்.

நீண்டகாலமாகச் சிறையிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் மனிதப் புதைகுழிகள் அகழ்தல் தொடர்பாகச் சர்வதேச விசாரணைகள் (ICC/ICJ) ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கைதுகள் மற்றும் கண்காணிப்புகளை நிறுத்த வேண்டும்.தமிழ் மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்தி, அதற்கான தடைகளை நீக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்கள் சட்டவிரோதமாகச் சூறையாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.

வரலாற்று அங்கீகாரம்: 1833-ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இராச்சியங்களாகவே இருந்தனர் என்ற வரலாற்று உண்மையைச் சிங்கள தேசம் ஏற்க வேண்டும்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...