தவெக அங்கீகரிக்கப்படவில்லை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சிப் பதில்!

actor vijay karur visit 112839198 16x9 1

கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தவெக மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு மதுரையைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற வழக்கறிஞர், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கிற்குப் பதிலளித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், “மனுதாரர் குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இல்லை” என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கட்சிகள் பட்டியலில் இல்லை என பதில் அளித்துள்ளது.

Exit mobile version