தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் விரைந்து அனைவரும் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் பிற நாடுகளில் தொடர்ந்து கொரோனா 4ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளது.
கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரானா தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார்.
மேலும் வரும் நாட்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது என்றார்.
#IndiaNews
Leave a comment