3
செய்திகள்இலங்கை

டிப்பர் மோதியதில் இளம்பெண் பலி – சாரதி கைது

Share

டிப்பர் மோதியதில் இளம்பெண் பலி – சாரதி கைது

இன்று காலை 10.30 மணியளவில் கோப்பாய் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை, அவர்கள் பின்னால் சென்ற டிப்பர் வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தி சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் கைதடிப் பக்கமாக மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது, அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை முந்த முற்பட்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் டிப்பர் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பெண் (வயது – 35) விழுந்துள்ளார். டிப்பர் சில்லினுள் அவரின் தலைப் பகுதி அகப்பட்டு நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்ற அவரின் கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2

acc

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...