ns hjnkbh nfbohnkgshniohb noibf
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்: பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்குச் சிறிதரன் எம்.பி பகிரங்க ஆதரவு!

Share

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ‘கரிநாளாக’ (Black Day) அனுஷ்டிக்க வேண்டும் எனவும், அதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களுக்கு இன்னும் உண்மையான அரசியல் சுதந்திரம் கிடைக்காத நிலையில், நாளை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இதற்கு வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம். சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 7 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.

 

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...